திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (14:17 IST)

மோடி இந்திய பிரதமரா? பாகிஸ்தான் தூதரா? முதல்வர் காட்டமான கேள்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்பாதது ஏன் என பிரதமர் மோடி சமீபத்தில் கேள்வி ஒன்றை எழுப்பினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பாகிஸ்தானில் இருந்து வரும் சிறுபான்மையினரை அவர்களின் தலைவிதி எப்படியும் போகட்டும் என நாம் விட்டுவிட முடியாது என்றும், அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது என்றும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  இந்தியாவின் பாராளுமன்றத்திற்கு எதிராக இருப்பதாகவும் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.

மேலும் எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்புவது என்றால்  பாகிஸ்தானில் உள்ள  சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்புங்கள் என்றும் அவர் கூறினார்.
 
இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த ஆவேச கேள்விகளுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
 
நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பாகிஸ்தானை தொடர்புபடுத்தி பேசும் மோடி உண்மையில் இந்தியாவின் பிரதமரா? அல்லது பாகிஸ்தானின் தூதரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த பதிலடியை நெத்தியடி என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.