1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (18:39 IST)

ஜெகன்மோகன் ரெட்டியின் பாணியை கடைபிடிக்கின்றாரா மம்தா?

ஜெகன்மோகன் ரெட்டியின் பாணியை கடைபிடிக்கின்றாரா மம்தா?
ஆந்திராவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கடைபிடித்த பாணியை தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி கடைபிடித்து வருவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்
 
ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற போது திடீரென ஜெகன்மோகன் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருப்பது போன்றும் ஒரு புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அனுதாப அலையில் தான் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது அதே பாணியில் மேற்குவங்க முதல்வர் மம்தாவும் தனக்கு காயம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜி மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகிய இருவருக்குமே அரசியல் ஆலோசனை கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.