வெள்ளி, 19 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 11 மார்ச் 2021 (08:42 IST)

மம்தா மீது மர்ம நபர்கள் தாக்குதல்... பரப்புரையின் போது பரபரப்பு!

மம்தா மீது மர்ம நபர்கள் தாக்குதல்... பரப்புரையின் போது பரபரப்பு!
தேர்தல் பரப்புரையின் போது தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மம்தா பானர்ஜி பரபரப்பு புகார். 

 
மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த முறை பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பேனர்ஜி சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று அவரை எதிர்த்து போட்டியிட நந்திகிராம் தொகுதியை தேர்வு செய்துள்ளார். 
 
இதனால் அங்கு வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பரப்புரையை மேற்கொண்டார். பின்னர் தனது காருக்கு திரும்பும் நேரத்தில் காவலர்கள் பக்கத்தில் இல்லாத நேரம் பார்த்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதோடு முதுகிலும் அதிக வலி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து புகாரும் அளித்துள்ளார்.