செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (18:53 IST)

காங்கிரஸ் வீழ்ச்சிக்கு இவர்தான் காரணம் – யோகி ஆதித்யநாத்

காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்திதான் காரணம் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைத்தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து பிரச்சாரம் மேற்கு கொண்டுவருகிறார்.

அவர் பாஜக குறித்து கடுமையான விமர்சனம் தெரிவித்த நிலையில்,அவரது விமர்சனத்திற்கு யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ராகுலாந்தி சொந்த அறிவைக் கொண்டு அப்படிப் பேசவில்லை; கடன்வாங்கிய அறிவைக் கொண்டு பேசுகிறார், மேலும் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமே ராகுல்காந்திதான் எனக் கூறியுள்ளார்.