செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 நவம்பர் 2018 (16:08 IST)

ஏன் என்ன பாக்க வரல? மர்ம உறுப்பை வெட்டி எரிந்த கள்ளக்காதலி

ஒடிசாவில் கள்ளக்காதலன் தன்னை பார்க்க நீண்ட காலமாக வராத காரணத்தால், அவரின் மர்ம உறுப்பை கள்ளக்காதலி வெட்டி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஓடிசா மாநிலத்தின் ஜரபேடா கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர நாயக் வேறு ஒரு ஊரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. வேலைக்கு வரும் முன்னரே இவருக்கு கமலா என்ற திருமணமான பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. 
 
இந்த விவகாரம் கமலாவின் வீட்டிற்கு தெரிந்து அவரை வீட்டைவிட்டு துரத்தியதால் கமலா தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்தான் ராஜேந்திர நாயக் வேலை நிமித்தமாக ஊரைவிட்டு சென்றுள்ளார். 
 
இதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்துதான் தற்போது தீபாவளிக்கு தனது கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் கமலாவை சென்று பார்த்துள்ளார். கமலாவின் வீட்டிற்கு சென்ற போது, கமலா ஏன் இத்தனை நாட்களாக வரவில்லை என சண்டை போட்டுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். 
 
இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் சற்று தனிந்ததால், ராஜேந்திரன் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். ஆனால், கமலாவின் ஆத்திரம் தீராததால் ராஜேந்திரன் தூங்கிக்கொண்டு இருக்கும் போது அவரின் மர்ம உறுப்பை துண்டித்துள்ளார்.
 
வலியில் அலறிய ராஜேந்திரன் இது குறித்து தனது குடும்பத்தினருக்கு தெரிவிக்க, இப்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கமலா கைது செய்யப்பட்டுள்ளார்.