மலபார் எக்ஸ்பிரசில் திடீர் தீ… சங்கிலியை இழுத்த பயணிகள்! – கேரளாவில் பரபரப்பு!

Train
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 17 ஜனவரி 2021 (09:39 IST)
கேரளாவில் இயக்கப்பட்டு வந்த மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த மலபார் எக்ஸ்பிரஸ் வர்கலா அருகே தீடீரென தீப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலின் சரக்குப்பெட்டியிலிருந்து தீ வெளியேறுவதை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றபட்ட நிலையில் தீ விபத்திற்கான காரணம் குறித்தும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :