1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (14:09 IST)

பணிப்பெண் கடத்தல் வழக்கு..! பவானி ரேவண்ணாவிற்கு முன்ஜாமீன்..!!

Bavani Ravanna
பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் பவானி ரேவண்ணாவுக்கு முன்ஜாமீன் வழங்கி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3,000 வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா, தாயார் பவானி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இதையடுத்து பவானி ரேவண்ணா தலைமறைவான நிலையில், ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து அவர் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜரானார்.

 
இந்நிலையில், முன்ஜாமீன் கோரி அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கடந்த 14-ம் தேதி கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். அதனடிப்படையில் கர்நாடக உயர்நீதிமன்றம், தற்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.