1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 பிப்ரவரி 2025 (13:10 IST)

தமிழ்நாட்டில் தங்குதடையின்றி சாதிய வன்கொடுமைகள்.. முதல்வருக்கு பா ரஞ்சித் கேள்வி..!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பேசி உள்ளார்.
 
இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் இயக்குனர் பா ரஞ்சித் பதிவு செய்து சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மான்புமிகு முதல்வர் முக ஸ்டாலின்
 அவர்களே!! 
 
தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!
 
Edited by Mahendran