வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (09:40 IST)

மகாத்மா காந்தி பிறந்தநாள்; நினைவிடத்தில் பிரதமர், குடியரசு தலைவர் மரியாதை!

Pm Modi
இன்று அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர், குடியரசு தலைவர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இந்திய சுதந்திர போராட்ட வீரரான மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.

இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் மரியாதை செலுத்தினர். பிறந்த நாளில் மகாத்மா காந்தியின் பஜனை பாடல்களும் பாடப்பட்டது.

நாடு முழுவதும் மகாத்மா காந்தி பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.