இந்தியாவில் தொடங்கியது 5ஜி சேவை: ஒருசில நொடிகளில் முழு திரைப்படம் டவுன்லோடு!
இந்தியாவில் தொடங்கியது 5ஜி சேவை: ஒருசில நொடிகளில் முழு திரைப்படம் டவுன்லோடு
பிரதமர் மோடி சற்று முன்னர் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார்
டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்
5ஜி அலைக்கற்றை ஏலத்தை எடுத்திருந்த ஜியோ, ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
5ஜி சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் தொலை தொடர்பு திறன் மற்றும் நெட்வொர்க் திறன் அதிகரிக்கும் என பிரதமர் மோடி கூறினார்
5ஜி சேவை மூலம் ஒரு முழு நீள உயர்ந்த வீடியோ அல்லது திரைப்படத்தை மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் ஒரு சில நொடிகளில் டவுன்லோட் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Edited by Mahendran