திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (10:55 IST)

தந்தை மரணம்; தனித்திருந்த தாய்! மறுமணம் செய்து வைத்த மகன்!

marriage
தந்தை மரணத்திற்கு பிறகு தனிமையில் இருந்த தாய்க்கு மகனே மறுமணம் செய்து வைத்த சம்பவம் மகாராஷ்டிராவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் யுவராஜ் செலே. இவர் பள்ளி படித்துக் கொண்டிருந்தபோது கடந்த 5 ஆண்டுகளுக்கும் முன்பாக சாலை விபத்து ஒன்றில் அவரது தந்தை உயிரிழந்துவிட்டார். பின்னர் தாயின் கவனிப்பில் அவர் வளர்ந்து வந்துள்ளார்.

தனது தாய் துணையில்லாம் தனியாக இருந்து வருவதை பார்த்த யுவராஜ் அவரை யாரையாவது மறுமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் முதலில் மறுத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்த யுவராஜ், பின்னர் மாருதி கன்வத் என்ற ஒருவருக்கு தனது தாயை மறுமணம் செய்து வைத்துள்ளார்.
மகனே தனது தாய்க்கு மாப்பிள்ளை தேடி திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K