1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (14:57 IST)

இரண்டாவது திருமணமா? நடிகை மேக்னா ராஜ் அளித்த பதில்!

நடிகை மேக்னா ராஜ் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் தற்போது கர்ப்பிணியாக இருந்தார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டார். ஆனால், தற்ப்போது அவர் குழந்தையாகவே மனைவியின் கர்ப்பத்தில் மறு உயிர் பெற்றுள்ளார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் இப்போது மீண்டும் அவர் நடிப்பில் ஆர்வமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதுபற்றி பேசியுள்ள மேக்னா ராஜ் “ தற்போது குழந்தையை வளர்ப்பது மற்றும் அவனின் எதிர்காலம் பற்றி யோசித்து வருகிறேன்.சிலர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்கிறார்கள். சிலர் குழந்தையோடு வாழ சொல்கிறார்கள். இந்த தருணத்தை வாழ்ந்துவிட வேண்டும் என என் கணவர் சொல்வார். அதனால் நான் நாளை பற்றி யோசிப்பதில்லை” எனக் கூறியுள்ளார்.