செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (22:19 IST)

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல இசையமைப்பாளர்

பிரபல இசையமைப்பாளர் டி இமான்  2 வது திருமணத்திற்குத் தயாராகியுள்ளதாக கவல் வெளியாகிறது.

நடிகர்  விஜய்யின் தமிழன், ஜில்லா, கும்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ உள்பட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த இமான் அவர்களுக்கும் மோனிகா ரிச்சர்ட் என்பவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’’ தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாகவும் இனி நாங்கள் சட்டபூர்வமாக கணவன் மனைவி இல்லை என்றும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தொடர அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் டி இமான் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை டி.இமான் இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகிறது.