திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 ஜூன் 2022 (07:29 IST)

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: மகாராஷ்டிரா முதல்வர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் திடீரென மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன
 
மகாராஷ்டிர மாநிலத்தை ஆட்சி செய்து வந்த சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் திடீரென போர்க்கொடி தூக்கியதை அடுத்து ஆட்சிக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்தது
 
இதனை அடுத்து தனது பெரும்பான்மையை முதல்வர் உத்தவ் தாக்கரே நிரூபிக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில கவர்னர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற சிவசேனா கட்சிக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை 
 
இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் திடீரென முதல்வர் பதவியிலிருந்து உத்தவ்தேவ் தாக்கரேராஜினாமா செய்துள்ளார். அவருடைய இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது