1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Maharashtra CM Devendra Fadnavis Met An Accident

முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் பட்னாவிஸ்!

முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் பட்னாவிஸ்!

முதல்வர்
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் செய்த ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் முதல்வர் பட்னாவிஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


 
 
மகாராஷ்டிரா முதல்வராக இருப்பவர் தேவேந்திர பட்னாவிஸ் அவர் இன்று ஹெலிகாப்டரில் பயணம் செய்த போது அந்த ஹெலிகாப்டர் அம்மாநிலத்தின் லதூர் என்னும் இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் முதல்வர் பட்னாவிஸ் எந்த காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
 
இந்த விபத்து நடந்த பின்னர் உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் பட்னாவிஸ் தவல் தெரிவித்துள்ளார். அதில் நான் பயணித்த ஹெலிகாப்டர் லதூர் பகுதியில் விபத்துக்குள்ளானது. ஆனால், உங்களுடைய வேண்டுதல்களின் பயனாக எந்த பாதிப்பு ஏற்படவில்லை. நானும் என்னுடைய அணியும் பாதுகாப்பாக உள்ளோ. கவலைப்பட தேவையில்லை என கூறினார்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
நானும் ரஜினி ரசிகன்தான் - செல்லூர் ராஜூ கலகல