ஸ்ரீதேவியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் - மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு
மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என மஹாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். அவரது உடல் என்பார்மிங் செய்யப்பட்டு நேற்று இரவு 10 மணி அளவில் அவரின் உடல் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 2 மணிக்கு தொடங்கப்பட்டு, மாலை 3.30 மணியளவில் அவரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. தற்போது அவரின் உடலுக்கு தமிழ், பாலிவுட் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை செலுத்த மஹாராஷ்டிரா அனுமதி அளித்துள்ளது. எனவே, ஸ்ரீதேவியின் உடலில் மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.