1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2018 (13:39 IST)

மகளின் காதல் விவகாரம் - மன உளைச்சலில் இருந்தாதா ஸ்ரீதேவி?

நடிகை ஸ்ரீதேவி தனது மகளின் காதல் விவகாரம் தொடர்பாக மன உளைச்சலில் இருந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 
திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். அதன்பின், அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு ஸ்ரீதேவியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான அனுமதி கடிதத்தை நேற்று துபாய் போலீசார் தற்போது வழங்கினர்.
 
அதற்குபின் அவரது உடல் என்பார்மிங் செய்யப்பட்டு அவரது உடல் நேற்று இரவு 10 மணி அளவில் அவரின் உடல் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.   
 
இந்நிலையில், அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 2 மணிக்கு மேல் நடக்க இருக்கிறது. தற்போது அவரின் உடலுக்கு தமிழ், பாலிவுட் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அது முடிந்தவுடன் அவரின் இறுதி ஊர்வலம் நடைபெறும் எனத் தெரிகிறது.

 
இந்நிலையில், அவரது மகள் ஜான்வியின் ஆண் நண்பர்கள் வட்டத்தை அறிந்த ஸ்ரீதேவி மகளின் நடவடிக்கை மீது அதிருப்தியில் இருந்ததாக செய்திகள் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. முக்கியமாக, நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகனுடன் ஜான்வி மிகவும் நெருக்கம் காட்டியதால் அதை ஸ்ரீதேவியால் தாங்கிக் கொள்ள முடியாமல், அவர் மன உளைச்சலில் இருந்தார் என பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. 

 
மகளை நடிகை ஆக்க விரும்பிய ஸ்ரீதேவிக்கு, ஜான்வின் காதல் விவகாரம் அதிர்ச்சியை கொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் மதுப் பழக்கத்தில் மூழ்கினார் எனவும் செய்திகள் உலா வருகிறது.
 
எனவே, மகளின் காதல் விவகாரம்தான் அவரின் உயிரை பறித்ததா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.