வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (17:27 IST)

“என் மனைவியை இன்னொருத்தன் பக்கத்துல படுக்க சொல்றீங்களே?” கணவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை

மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் ஸ்ட்ரெச்சர்கள் அதிகம் இல்லாததால் சிகிச்சைக்கு வந்த ஆணையும், பெண்ணையும் ஒரே ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்து சென்றுள்ளார்கள்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள யஷ்வந்த் ராவ் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது இந்த சம்பவம். தன் மனைவியை கால் முறிவு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார் ஒருவர். ஸ்கேன் செய்வதற்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற நர்ஸ் ஸ்ட்ரெச்சரில் ஏற்கனவே கிடந்த ஒரு ஆணை ஒதுங்கி படுத்துக்கொள்ள சொல்லிவிட்டு இந்த பெண்ணை அருகில் படுத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார்.

அதிர்ச்சியடைந்த கணவர் “என் மனைவியை இன்னொருத்தன் பக்கத்துல படுக்க சொல்றீங்களே?” என கேட்டுள்ளார். ஸ்ட்ரெச்சர் இல்லை எண்ரு கூறியிருக்கிறார் நர்ஸ். வேருவழியின்றி பொறுத்து கொண்டுள்ளார் கணவர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சம்பந்தபட்ட நர்ஸ் மற்றும் டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறிப்பிடத்தக்கது.