திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (15:45 IST)

மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி?? – மத்திய பிரதேசத்தில் ஆச்சர்யம்!

Goat
மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆடு ஒன்று மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட ஆட்டுக் குட்டியை ஈன்றுள்ளது வைரலாகியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷாவில் உள்ள செமால் செடி என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அதில் கர்ப்பமாக இருந்த ஆடு ஒன்று சமீபத்தில் குட்டி போட்டுள்ளது. அந்த குட்டியை எடுத்து பார்த்த விவசாயிக்கு ஆச்சர்யம்.

அந்த ஆட்டுக்குட்டியின் முகம் மனிதனின் முகத்தை ஒற்றத்தன்மை கொண்டிருந்துள்ளது. மனிதனை போல கண், மூக்கு மற்றும் வாய் ஆகியவை நேராக நெருக்கமாக அமைந்திருந்துள்ளது. இந்த செய்தியறிந்து அப்பகுதி மட்டுமல்லாமல் பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்களும் அந்த ஆட்டுக்குட்டியை காண வந்து செல்கிறார்களாம்.

ஆடு, மாடு போன்றவை குட்டிகளை ஈனும்போது இதுபோன்று சில குட்டிகள் அபூர்வமான உருவத்தில் பிறப்பது உண்டு. இப்படி பிறக்கும் குட்டிகளை கிராம மக்கள் அபூர்வமானதாக கருதுகிறார்கள்.

Edit By Prasanth.K