ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (17:31 IST)

என்னங்கடா இதெல்லாம்... லுங்கி கட்டி, பனியன் போட்டு வண்டி ஓட்டுனா ஃபைன்!!

இனி வாகனம் ஓட்டும் போது லுங்கி, பனியன் அணிந்திருந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படுமாம். 
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உத்தரபிரதேச லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் ஆடைக் குறியீட்டை மீறி லுங்கி மற்றும் பனியன் அணிந்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.
 
மேலும், சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஒரு புதிய விதி, ஓட்டுநர்கள் முழு நீள பேண்ட் - சட்டை அல்லது டி ஷர்ட் அணிய வேண்டும். அதோடு வாகனம் ஓட்டும் போது மூடிய காலணிகளையும் அணிய வேண்டுமாம். 
இது குறித்து பேசிய போக்குவரத்துத்துறை ஏஎஸ்பி லக்னோ பூர்னெந்து சிங், ஆடைக் குறியீடு எம்வி சட்டத்தின் ஒரு பகுதியாக 1939 முதல் உள்ளது. ஆடை குறியீட்டை மீறியதற்காக 1989 ஆம் ஆண்டில் சட்டம் திருத்தப்பட்ட போது ரூ.500 அபராதம் என அறிமுகப்படுத்தப்பட்டது. 
 
ஆனால், இப்போது எம்வி ஆக்ட் 2019, 179 வது பிரிவின் கீழ் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என கூறினார். அதோடு பள்ளி வாகன ஓட்டுனர்கள், அரசாங்க வாகன ஓட்டுநர்கள் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.