அரசு ஊழியர்கள் துப்பட்டா போடவேண்டும் – கிரிஜா வைத்யநாதன் உத்தரவு !
தலைமை செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் துப்பட்டா அணிய வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான புதிய ஆடைக்கட்டுப்பாட்டு முறைகளை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் அறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார். அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாட்டு முறைகள் :-
-
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒழுக்கமான சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்
-
பெண்கள் புடவை அல்லது சல்வார் கமீஸ் அணியலாம், சல்வார் கமீஸ் அணிபவர்கள் கட்டாயமாக துப்பட்டா போட வேண்டும்
-
ஆண் ஊழியர்கள் கேஷுவலாக இல்லாமல் பார்மலான நல்ல உடைகளை அணியவேண்டும்
-
நீதிமன்றம் அல்லது நீதித்துறை சார்ந்த மன்றங்களில் ஆஜராக வேண்டி இருந்தால் கோட் அணிந்து செல்லவேண்டும். திறந்தவகையிலான கோட் அணிபவர்கள் கண்டிப்பாக டை அணிய வேண்டும். பெண்கள் புடவை மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ் அணிய வேண்டும்.