வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 2 பிப்ரவரி 2023 (11:47 IST)

அதானி குழும விவகாரத்தால் கூச்சல் குழப்பம்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

lok sabha
அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் இட்டதை அடுத்து நாடாளுமன்ற மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். 
 
அதானி நிறுவனங்களின் பங்குகள் குறைந்து வருவதை அடுத்து பங்குச்சந்தை ஆட்டம் கண்டு வருகிறது. இந்த நிலையில் அதானி குழும விவகாரம் தொடர்பாகவும் அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள ஹிண்டர்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் விட்டு வருகின்றனர் 
 
எதிர்க்கட்சி எம்பிக்களின் கூச்சல் குழப்பம் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
 
Edited by Siva