8வது நாளாக முடங்கிய மத்திய மற்றும் மாநிலங்களவை !
எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் 8வது நாளாக முடங்கியது.
மத்திய மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிட்டு எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் 8வது நாளாக முடங்கியது. மக்களவையில் அத்துமீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.