வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (17:41 IST)

388 என்ற இமாலய இலக்கு: மே.இ.தீவுகள் வெற்றி பெறுமா?

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 388 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய வந்த ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ருத்ரதாண்டவம் ஆடினார்கள்.
 
ரோகித் சர்மா 138 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சருடன் 159 ரன்கள் குவித்தார். இதேபோல் கேஎல் ராகுல் 104 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 102 ரன்கள் அடித்தார் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே அவுட் ஆன போதிலும் அதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களும், ரிஷப் பண்ட் 39 ரன்களும், எடுத்ததால் இந்திய அணி 387 என்ற இமாலய ரன்களை எட்டியுள்ளது 
 
மேற்கிந்திய தீவுகள் அணியின் தரப்பில் காட்ரெல் 2 விக்கெட்டுகளையும் பால், ஜோசப் மற்றும் பொல்லார்டு தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காட்ரெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும் 9 ஓவர்களில் 83 ரன்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டியில் 388 என்ற இலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்றாக கருதப்படுவதால் மேற்கிந்திய தீவுகள் அணி இந்த இலக்கை எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்