1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (14:44 IST)

அடிபம்பில் தண்ணீருக்கு பதில் சாராயம்: போலீசார் அதிர்ச்சி!

alcohol
அடிபம்பில் தண்ணீருக்கு பதில் சாராயம்: போலீசார் அதிர்ச்சி!
அடி பம்பில் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் அந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சன்சோட்டா என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது
 
இதனையடுத்து போலீசார் அங்கு சோதனை செய்த போது அங்கிருந்த அடிபம்பு ஒன்று வித்தியாசமாக இருந்ததை பார்த்த அந்த அடிபம்பை அடித்து பார்த்தபோது அதில் தண்ணீருக்கு பதிலாக கள்ளச்சாராயம் வந்தது 
 
இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள நிலத்தை தோண்டிய போது 7 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த டேங்கில் லிட்டர் கணக்கில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும்,  தேவைப்படும்போது அடி பம்பில் அடித்து  கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva