திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (09:47 IST)

கர்நாடகாவில் ஜீப்பைத் துரத்திய சிங்கம் – நூலிழையில் உயிர்தப்பிய சுற்றுலாப் பயணிகள் !

கர்நாடகாவில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு சென்ற பயணிகளின் ஜீப்பை சிங்கம் ஒன்றும் துரத்தும் வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது.

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம் பெல்லாரி மாவட்டம் ஹம்பிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் அடல் பிஹாரி வாஜ்பாய் விலங்கியல் பூங்கா அமைந்திருக்கிறது. அப்பகுதியில் மிகவும் பிரபலமான இந்த சுற்றுலாத் தளத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இந்த் பூங்காவில் காரில் சுற்றுலா சென்ற வாகனம் ஒன்றை சிங்கம் ஒன்று துரத்தும் காட்சி வெளியாகியுள்ளது. வாகனத்தை வேகமாக துரத்தும் சிங்கம் சிறிது நேரத்தில் அதைப் பின் தொடர முடியாமல் நின்று விடுகிறது. இதனை அந்த காரில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.