1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (11:12 IST)

10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: லிங்காயத் மடாதிபதி கைது!

lingayath
10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: லிங்காயத் மடாதிபதி கைது!
பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்திலுள்ள லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணம் குரு என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கர்நாடகா மாநிலத்தில் சித்ர துர்கா என்ற மாவட்டத்தில் உள்ள லிங்காயத் மடத்திற்குச் சொந்தமான பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு லிங்காயத் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணம் குரு என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது
 
இந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன