ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (14:52 IST)

பீகாரில் ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

பீகாரில் கடந்த 2 நாட்களில் நடந்த போராட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக  தகவல். 
 
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத்  என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருவது என்பது தெரிந்ததே. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயிலுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 
 
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் கடந்த 2 நாட்களில் நடந்த போராட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தானாபூர் ரயில்வே மேலாளர் பிரபாத் குமார் தெரிவித்துள்ளார். 50 ரயில் பெட்டிகள், 5 ரயில் எஞ்சின்கள் ஆகியவை போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டுள்ளதாக தானாபூர் ரயில்வே தெரிவித்துள்ளது.
 
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மட்டுமின்றி பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.