1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (09:04 IST)

தி.நகர் தொழிலதிபர் கடத்தல்: பெண் மருத்துவர் கைது!

arrest
சென்னை தியாகராயநகர் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
 
சென்னை தியாகராயநகர் தொழிலதிபர் சரவணன் மற்றும் பெண் மருத்துவர் அமிர்தா ஆகியோரிடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தியாகராயநகர் தொழிலதிபர் சரவணனை மர்மநபர்கள் கடத்தியதாக கூறப்பட்டது. 
 
இந்த கடத்தலில் பெண் மருத்துவர் அமிர்தாவுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே இந்த வழக்கில் சிறை காவலர், கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பெண் மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது