ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 21 ஜனவரி 2023 (21:06 IST)

பெண்ணின் கருவை நாய்க்கு உணவாக அளித்த மருத்துவர்?

Pregnancy
பீகார் மாநிலம் ஹாஜிபூரில் சட்டவிரோத கருக்கலைப்பு நடத்தி, கருவை,  நாய்க்கு ஊட்டியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகர் மாநிலம் வைஷாலி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் குவாக்கை அணுகியுள்ளனர்.

அவர் பரிந்துரை செய்த மருந்துகளை உட்கொண்ட அப்பெண்னுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால், அப்பெண்ணின் உடல் நிலை மோசமடைந்தது.

இதையடுத்து, அப்பெண் பாட்னாவுக்குப் பரிந்துரைப்பட்டார். பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கருக்கலைப்பு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையில் பெண்ணின் உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியதை அடுத்து மருத்துவர் மற்றும் அவரது மனைவி இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்டுள்ள குவாக் தனது செல்ல நாய்க்கு பெண்ணின் கருவை ஊட்டியதாகக் கூறப்பட்டும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.