வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 மார்ச் 2023 (21:47 IST)

புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பிய ஒருவர் கைது!

புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பிய ஒருவர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் வடமாநிலத் தொழிலாளர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வேலை செய்துவரும் வடஇந்திய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விசாரிக்க பீகாரில் இருந்து 4 அதிகாரிகள் தமிழ் நாட்டிற்கு அனுப்பியுள்ளார் அம்மாநில முதல்வர் நிதிஸ்குமார்.

அந்த அதிகாரிகள் கோவைகள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து, வதந்தி பரப்பியவர் பீகார் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த போலி வீடியோக்களை நீக்க டுவிட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு பீகார் மாநில காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டுள்ளதாக பீகார் மாநில காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில்,  தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ‘’வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில், பத்திரிக்கைகளில் இந்த வதந்தி பரப்பியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.