சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத் சமீபகாலமாக நடித்த எந்தவொரு படங்களும் வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம் அவரின் பாஜக ஆதரவு நிலைதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் இப்போது அவர் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள அவர் “சினிமா உலகம் பொய்யானது. அங்கு பார்வையாளர்களைக் கவர பொய்யான உலகை உருவாக்குகிறார்கள். எனக்கு நடிப்பு சலிப்பை ஏற்படுத்தியதால்தான் நான் கதை, இயக்கம் என அடுத்த துறைகளுக்கு நகர்ந்துவிட்டேன். இப்போது அரசியலுக்கு வந்துள்ளேன். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை நடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.
கங்கனா, இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இது தவிர தமிழில் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.