வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (16:51 IST)

பெண்களுக்காக போராடி நீதி பெற்று தருவேன்: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பேட்டி..!

Kushboo
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இன்று பதவி ஏற்று கொண்ட நடிகை குஷ்பு பெண்களுக்காக போராடி அவர்களுக்கு நீதி பெற்று தருவேன் என்று தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டதை மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்த குஷ்பு பெண்களுக்காக போராடிய குரல் கொடுத்து பேச எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று தெரிவித்த குஷ்பு சமூக ஊடகங்கள் வாயிலாக மட்டுமின்றி வெளி உலகத்திலும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.
 
பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றம் செல்லவும் காவல் நிலையம் சென்ற புகார் அளிக்கவும் பயப்படுகிறார்கள் என்றும் பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தால் அவர்களுக்கு நீதி கிடைக்க நிச்சயம் பாடுபடுவேன் என்றும் குஷ்பு தெரிவித்தார்.
 
Edited by Mahendran