ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (13:33 IST)

நட்பாக பழகிய மாணவி; மது கொடுத்து சீரழித்த நண்பர்கள்! – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

girl abuse
கேரளாவில் நட்பாக பழகிய மாணவிக்கு மதுவை கொடுத்து நண்பர்களே வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாக்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நர்சிங் படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி மூவரும் சந்திப்பதும் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஒருநாள் தனது வீட்டிற்கு நண்பர்களில் ஒருவர் அந்த பெண்ணை அழைத்துள்ளார். அந்த மாணவியும் நண்பர்கள்தானே என நம்பி சென்றுள்ளார். மூவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மது அருந்திய இளைஞர்கள் இருவரும் மாணவியையும் மது குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.


இதனால் மது அருந்திய மாணவி போதையில் மயக்கமாகியுள்ளார். அதை வாய்ப்பாக பயன்படுத்தி இளைஞர்கள் இருவரும் இரவு முழுவதும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மாணவியை எர்ணாக்குளம் பேருந்து நிலையம் அருகே விட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

மாணவி சோர்வாக இருப்பது கண்டு நர்சிங் கல்லூரி ஆசிரியர்கள் விசாரித்ததில் உண்மை தெரிய வர இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போலீஸார் அந்த இரு இளைஞர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நட்பாக பழகிய மாணவியை நண்பர்களே சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K