செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (08:21 IST)

விமானத்தில் செல்ல தடை விதித்த நிறுவனம் – நடிகரின் தைரிய முடிவு !

விமானத்தில் செல்ல ஆறுமாதம் தடை விதித்த இண்டிகோ விமான நிறுவனத்திற்கு எதிராக 25 லட்ச ரூபாய் கேட்டு நடிகர் குனால் கம்ரா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பாஜக ஆதரவாளராக அறியப்படும் ரிபப்ளிக் தொலைக்காட்சி அர்னாப் கோசாமியிடம் பாலிவுட் நடிகர் குனால் கம்ரா என்பவர் தன்னுடைய விமானப் பயணத்தின் போது சில கேள்விகளைக் கேட்டு அதை வீடியோவாக எடுத்து பதிவேற்றி இருந்தார்.

அந்த வீடியோவில் ரோஹித் வெமுலா பற்றி கேள்வி எழுப்பிய குனால் அவர் எழுதிய 10 பக்க கவிதையை படியுங்கள் உங்களுக்கு இதயம் இருந்தால் எனவும் நீங்கள் தேசியவாதியா அல்லது கோழையா? சொல்லுங்கள் பார்வையாளர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் எனக் கூறி அவரைக் கேள்விகளால் துளைக்கிறார். அவரின் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் அர்னாப் கோசாமி அமைதியாக இருக்கிறார்.

நேற்று வெளியான இந்த வீடியோ சைரல் ஆக,இன்று இண்டிகோ விமான நிறுவனம் குனால் கம்ரா விமான விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதால் அவர் இன்னும் 6 மாதத்துக்கு தங்கள் விமானங்களில் பறக்க தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தைப் போலவே மற்ற சில விமான நிறுவனங்களும் குனாலுக்கு தடை விதித்ததால் அவரால் பல நாடுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியவில்லை.

இதனால் தனக்கு ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுகட்டும் வகையிலும் பொதுவெளியில் ஏற்பட்ட அவமானத்துக்காகவும் தனக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமென அவர் வழக்குத் தொடுத்துள்ளார். விமானத்தில் குனால் நடந்து கொண்ட விதம் மிகப்பெரிய குற்றம் இல்லை என அந்த விமானத்தின் பைலட் தெரிவித்திருப்பது குனாலுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.