மிச்சம் மீதிதான் நமக்கு: தேர்தல் கூட்டணிக்கு பின் புலம்பும் முதல்வர்!

Last Modified சனி, 16 மார்ச் 2019 (12:18 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிகள் முடிவாகியுள்ள நிலையில், கர்நாடகாவில் மஜத கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தியது. 
 
இந்த கூட்டத்தில் மஜத தலைவரும், கர்நாடக முதலவருமான குமாரசாமி மிகவும் வருத்ததுடன் பேசினார். அவர் கூறியது பின்வருமாறு, நான் மகிழ்ச்சியாக ஆட்சி நடத்தி வருகிறேன் என அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், நான் நெருப்பில் போட்ட  புழுவாக துடித்துக் கொண்டு, ஆட்சி நடத்தி வருகிறேன். 
 
ஒவ்வொரு நாளும் நான் அனுபவிக்கும் வேதனை யாருக்கும் தெரியாது. அதிகாரத்தில் நாம் இருந்தாலும் காங்கிரஸ் விட்டு கொடுப்பதைதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. 
கூட்டணி தர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், நமது லட்சியங்களை ஆட்சி அதிகாரத்தின் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பல நேரங்களில் கசப்பான கஷாயங்களை நான் குடித்து வருகிறேன். 
 
வரும் மக்களவை தேர்தலில் 8 தொகுதிகள் கிடைத்துள்ளது. இந்த தொகுதிகளில் ஒன்றும் குறைவு இல்லாமல் வெற்றி பெற  வேண்டும் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :