வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Modified: வியாழன், 14 மார்ச் 2019 (17:22 IST)

மோடியின் ஆதரவாளர்கள் முட்டாள்கள்! சர்ச்சையில் சிக்கிய குத்து ரம்யா!

தமிழ், கன்னடத்தில் பிரபலமான நடிகை ரம்யா. இவர் சிம்புவின் குத்து படத்தின் அறிமுகம் ஆனதால் இவரை எல்லோரும் 'குத்து ரம்யா' என அழைத்தார்கள்.

 
இதனிடையே தன்னுடைய பெயர் திவ்யா ஸ்பந்தனா என அறிவித்தார் ரம்யா. இப்போது ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியில் சோசியல் மீடியா பிரிவன் தலைவியாக உள்ளார்.
 
இவர்  அடிக்கடி மோடியை விமர்சித்து டுவிட்டரில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.அந்த வகையில்  தற்போது மோடியின் ஆதரவாளர்களை முட்டாள் என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது பதிவில், “உங்களுக்கு தெரியுமா? மூன்றில் ஒரு மோடி ஆதரவாளர் அடுத்த இரண்டு பேர் போலவே முட்டாள்” என குறிப்பிடப்பட்டிருக்கும் மீமை ஷேர் செய்துள்ளார்.
 
இவரது கருத்துக்கு மோடியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் புகைப்படத்தில், அவரை திருடன் என குறிப்பிடும் வகையிலான பதிவு ஒன்றை பகிர்ந்ததால் திவ்யா ஸ்பந்தனா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .