செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 மார்ச் 2019 (16:20 IST)

முடிவானது தொகுதிகள்; வேலையை முடித்த ராகுல்!

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் போது அமைந்த இந்த கூட்டணி தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கும் தொடர்கிறது. 
 
இந்நிலையில், இவ்விரு கட்சிகளும் தங்களது தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி மற்றும் மஜத பொதுச்செயலா் டேனிஷ் அலி ஆகியோரிடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடா்ந்த தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.
 
இந்த பேச்சுவார்த்தை கொச்சியில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 
 
இதில் துமகுரு தொகுதியும் மஜதவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. மேலும் ஹசன், மாண்டியா, பெங்களூரு வடக்கு, உடுப்பி – சிக்மங்களூரு, விஜயபுரா, உத்தர கன்னடா, ஷிமோகா தொகுதியிலும் மஜத போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.