ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் எந்தவித பாதிப்புமின்றி உயிர் தப்பினர்.
நேற்று ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட நிலையில் அதில் ஒரு ரயிலில் பயணம் செய்த 1200 பேர்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால் நேற்று ரயில் விபத்து ஏற்பட்டது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டி மீது பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயில் மோதிய நிலையில் பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு எந்தவித பாதிப்பு இல்லை இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran