வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஜூன் 2023 (10:17 IST)

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: 43 ரயில்கள் ரத்து..!

ஒடிசாவின் கோரமண்டல ரயில் விபத்து காரணமாக 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்குப் பிறகு 38 ரயில்கள் திருப்பி விடப்பட்டதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 
 
 நேற்று இரவு முதல் இன்று வரை தமிழகத்தில் இருந்து 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பயணிகள் கடும் அவதியில் இருப்பதாகவும் தெரிகிறது.
 
மேலும் ரத்து செய்யப்பட்ட ரயிலில்  முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சிறப்பு கவுண்டர்கள் அமைத்து கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து இருப்பதால் நேரடியாக வங்கி கணக்கிற்கு கட்டண தொகை திரும்ப வழங்கப்படும்  என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran