செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (14:25 IST)

மாயமான மாயஜாலக்காரர் – மேஜிக்கால் வந்த விபரீதம்

கல்கத்தாவில் கை,கால்களை கட்டிக்கொண்டு ஆற்றில் மூழ்கிய மேஜிக்மேன் ஆற்றோடு மாயமாய் மறைந்து போனது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின் பிரபல மாயாஜாலக்காரர் சன்சா லஹிரி. காட்சி கூடத்திற்குள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் நடந்து செல்லும் சாதாரண வீதிகளில் கூட அசாதாரண மாஜிக்குகளை செய்து காட்டுவதில் வித்தகர்.

இவர் நேற்று கல்கத்தாவின் புகழ்மிக்க ஹௌரா பாலத்திலிருந்து ஒரு மேஜிக் செய்து காட்டப்போவதாக அறிவித்திருந்தார். அதை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். சன்சாவின் கை, கால்களை கட்டி விட்டனர் அவரது உதவியாளர்கள். பிறகு உயரமான ஹௌரா பாலத்தின் தூணிலிருந்து கயிற்றில் அவரை கட்டி ஆற்று தண்ணீருக்குள் அவரை மூழ்கடித்தனர். கை, கால்களை கட்டியிறுந்த கயிறுகளை அவிழ்த்து அவர் தண்ணீரிலிருந்து வெளியே வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் வரவேயில்லை. பதட்டமடைந்த சன்சாவின் உதவியாளர்கள் காவல் துறையை அழைத்தனர்.

போலீஸார் வெகு நேரமாக தேடுதல் வேட்டை நடத்தியும் அவர் கிடைக்கவேயில்லை. இரவு நேரம் என்பதாலும், ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததாலும் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சன்சா லஹிரி மாயமானதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.