2027ல் இந்தியா முதலிடம் பிடிக்கும் – எதில் தெரியுமா?

population
Last Modified செவ்வாய், 18 ஜூன் 2019 (13:24 IST)
ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் உலகத்தின் மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து வெளியிட்ட அறிக்கையில் எந்தெந்த நாடுகளில் மக்கள்தொகை குறையும், எந்தெந்த நாடுகளில் அதிகரிக்கும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது உலகின் மொத்த மக்கள் தொகை 770 கோடியாக உள்ளது.

இது 2050ம் ஆண்டில் 950 கோடியாக அதிகரிக்கும் என்றும், இந்த நூற்றாண்டு முடியும்போது தோராயமாக 1100 கோடியாக அதிகரித்திருக்கும் என்றும் கூறியுள்ளது. தற்போது ஆண்டொன்றுக்கு மக்கள் தொகை அதிகரித்து வரும் நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னிலையில் உள்ளது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி அதிக மக்கள்தொகை உள்ள நாடு சீனா. ஆனால் அங்கே மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. எனவே சீனாவின் மக்கள் தொகை அதிகரிப்பு 2050க்குள் 3 கோடி அளவுக்கு குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 120 கோடியாக உள்ளது. இது 2050க்குள் அதிகரித்து இந்தியா உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக மாறிவிடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :