1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 26 மே 2021 (10:25 IST)

மஞ்சள் பூஞ்சை : அறிகுறிகளும் உடலில் ஏற்படும் மாற்றங்களும்... !

இந்தியாவில் பரவி வரும் மஞ்சள் பூஞ்சை உயிருக்கே ஆபத்தானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையை அடுத்து தற்போது மஞ்சள் நிறப் பூஞ்சை ஒன்று பரவி வருவதாகவும் இந்தியாவில் பரவி வரும் இந்த பூஞ்சை உயிருக்கே ஆபத்தானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
மஞ்சள் பூஞ்சை பொதுவாக முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன வகை உயிரினங்களிடம் மட்டுமே காணப்படும். தற்போது முதன்முறையாக மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவின் மூலம் இந்த மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக உபயோகப்படுத்தும் ஸ்டெராய்டு, பூஞ்சை தடுப்பு மருந்துகளினால் இந்த பாதிப்பு ஏற்படும். கொரோனாவினால் குணமானவர்களும் இதனால் பாதிக்கப்படலாம்.
 
மஞ்சள் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதீத சோர்வு, பசியின்மை ஏற்பட்டு அதன் மூலம் உடல் எடை குறைவு, உள்ளே ரத்தம் கசியும் மற்றும் உடல் உறுப்புகள் செயல் இழப்பு போன்றவை நேரும்.