செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 மே 2021 (08:16 IST)

16.64 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் 6 லட்சம் அதிகம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,64,54,364 கோடியாக அதிகரித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,64,54,364 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
ஆம், கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் 6,10,427 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,64,54,364 பேராக உயர்ந்துள்ளது. இதேபோல, உலகம் முழுவதும் 14,72,16,774 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 15,781,667 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 98,182 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.