1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 அக்டோபர் 2018 (10:04 IST)

பூதாகாரமாகும் சமரிமலை விவகாரம்: சன்னிதானத்தை மூட உத்தரவு?

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டதை கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது. 
 
ஆம், இன்று சபரிமலைக்கு சென்ற இரு பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த செய்தியாளர் கவிதா என்பரும் அவருடன் சென்ற பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 
 
தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்ததையடுத்து கேரள அரசும் இரு பெண்களை சன்னதிக்குள் செல்ல விடாமல் அனுப்பும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தற்போது பெண்கள் நுழைந்தால் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தை மூட பந்தள மன்னர் குடும்பம் உத்தரவிட்டுள்ளது. அதவாது, பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடுமாறு மேல்சாந்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.