200 காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசித்த பெண் பத்திரிகையாளர்
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும் ஒருசில அமைப்புகள் பெண்கள் ஐயப்பனை தரிசிக்க செல்ல கூடாது என மிரட்டி வருகின்றன. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த உறுதியாக உள்ள கேரள அரசு ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களுக்கு முழு பாதுகாப்பை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றின் செய்தி வாசிப்பாளர் கவிதா என்பவர் கடந்த சில நாட்களாக விரதம் இருந்து நேற்று ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு பயணம் செய்தார். அவருக்கு 200க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு அளித்தனர். காவல்துறை பாதுகாப்புடன் ஐயப்பன் சன்னிதானம் நோக்கி சென்ற கவிதா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் முன் அமர்ந்து பக்தர்கள் தர்ணா நடத்தியதாகவும், அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடைசியாக கிடைத்த தகவலின்படட சன்னிதானத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் கவிதா தற்போது தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது