வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 30 மே 2022 (22:19 IST)

தற்செயலாக வாங்கிய லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசு

Lottery
கேரளா லாட்டரி பம்பர் குலுக்கல் கன்னியாகுமரியைச் சேர்ந்த டாக்டர் மற்றும் அவரது உறவினருக்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது
 
கேரளா பம்பர் குலுக்கல் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற. அந்த குலுக்கலில் 727 990 என்ற எண்ணுக்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது 
 
குலுக்கல் முடிந்து ஒரு வாரம் கடந்தும் பரிசுக்குரிய அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியாத நிலையில் பரிசுக்குரிய லாட்டரியை வாங்கிய ள் கன்னியாகுமரியைச் சேர்ந்த டாக்டர் பிரதீப் குமார் மற்றும் ரமேஷ் என்று தெரியவந்துள்ளது 
 
பரிசு பெற்றவர்கள் திருவனந்தபுரத்தில் லாட்டரி இயக்குனரகத்தில் தங்களைப் பற்றிய விவரங்களுக்கான ஆவணங்களை தாக்கல் செய்து உரிமை கூறினர் 
 
கோயில் திருவிழா ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால் லாட்டரியில் பரிசு கிடைத்தது குறித்து தாமதமாக அறிய முடிந்ததாக அவர்கள் இருவரும் கூறியுள்ளனர் 
 
இந்த மாத துவக்கத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு உறவினரை வரவேற்க சென்றபோது இந்த லாட்டரியை வாங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்