1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:51 IST)

கேரள பட்ஜெட்.. பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதிப்பு!

petrol
கேரளாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கேரள மாநிலத்தில் இன்று ரூபாய் 1150 கோடி கூடுதல் நிதி திரட்ட பெட்ரோல் டீசல் மற்றும் மதுபானங்கள் மீது புதிய செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்த அறிவிப்பு காரணமாக பெட்ரோல் டீசல் மற்றும் மதுபானங்களின் விலை உயரும் என்று கூறப்படுகிறது. பெட்ரோல் டீசல் மீது லிட்டருக்கு இரண்டு ரூபாய் செஸ் வரியும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மீது 20 ரூபாய் 40 வரை செஸ் வரியும் விதிக்கப்பட்டுள்ளது 
 
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீது எந்த விதமான அறிவிப்பும் இல்லை என்று குற்றம் சாட்டிய கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் பெட்ரோல் டீசல் மீது கூடுதல் வரி விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran