ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (09:58 IST)

கள்ளக்காதலனுடன் பைக்கில் உல்லாசமாக சென்ற மனைவி? நடுரோட்டில் ஓடவிட்டு வெட்டிய கணவன்!

Knife
ராணிப்பேட்டையில் காதலித்து மணம் செய்து கொண்ட மனைவில் வேறு ஒரு நபருடன் பைக்கில் உல்லாசமாக செல்வதை கண்ட கணவன், மனைவியை நடுரோட்டில் துரத்தி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பெயிண்டர் வேலை பார்ப்பவர் ரஹமதுல்லா. இவர் சில ஆண்டுகள் முன்னதாக புதுவண்ணாரப்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்த சமயம் திருவொற்றியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சனாப் என்ற இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை மூண்டு வந்த நிலையில் சனாப் கோவித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பின்னர் ரஹமதுல்லா பேச முயன்றும் அவரை சனாப் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சனாப்பை ரகசியமாக பின் தொடர்ந்துள்ளார் ரஹமதுல்லா. அப்போது சனாப் வேறு ஒரு ஆணுடன் பைக்கில் கட்டி அணைத்தபடி நெருக்கமாக செல்வது, பல்வேறு இடங்களுக்கு செல்வது என இருந்துள்ளதை பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் நேற்று அவரது மனைவி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சனாப்பை தாக்க தொடங்கியுள்ளார். தப்பி தெருவில் ஓடிய சனாப்பை துரத்தி சென்று மூர்க்கமாக தாக்கியுள்ளார் ரஹமதுல்லா. இதனால் சனாப் ரத்த வெள்ளத்தில் சாலையிலேயே சரிந்தார். இதுகுறித்து பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் உடனடியாக சம்பவ இடம் விரைந்த புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் சனாப்பை மீட்டு மருத்துவமனை அனுப்பியதுடன், ரஹமதுல்லாவையும் கைது செய்தனர்.

சனாப் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K