திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 31 மே 2025 (13:36 IST)

பொது இடங்களில் மாஸ்க் அவசியம்.. கேரள முதல்வர் அறிவுறுத்தல்.. தமிழகத்தின் நிலை என்ன?

Face Mask
கேரளத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், “மாநிலத்தில் 727 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக கோட்டயம், எர்ணாகுளம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது” என்று கூறினார்.
 
சளி, இருமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 
மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறைகளில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்கள் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்   கொதிக்க வைத்த நீரை மட்டுமே பருக வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
 
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வந்தாலும் மாஸ்க் கட்டாயம் என்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
 
Edited by Mahendran